Total Pageviews

Thursday, July 28, 2011

நம்பருக்கு பொறந்தவிய்ங்க!

பிறந்ததும் படுக்கை நம்பர்,
படிக்கையில் மார்க் நம்பர்,
பரிட்சையில் ரோல் நம்பர்,
பதினெட்டானா வோட்டர் கார்ட் நம்பர்,

வேலை தேட எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ் நம்பர்,
வேலை கிடைச்சா எம்ப்ளாயீ நம்பர்,
வண்டி வாங்கினா ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்,
இன்சூரன்ஸ் எடுத்தா பாலிசி நம்பர்,

அட்டண்டன்ஸ் போட ஐடி கார்ட் நம்பர்
சம்பளம் போட அக்கவுண்ட் நம்பர்,
பணமெடுக்க ஏடிஎம் பின் நம்பர்,
டிவி பார்க்க ரிமோட்டில் நம்பர்,

பஸ்,ரயில்,விமானமும் ஏதோ ஒரு நம்பர்,
ரிசர்வேசனுக்கு பிஎன் ஆர் நம்பர்,
உக்கார படுக்க இருக்கை நம்பர்,
உரையாட செல்ஃபோன் நம்பர்,

கட்டுற வரிக்கு பான் நம்பர்,
கட்டாத வரிக்கு பெனால்டி நம்பர்,
கடன் வாங்க கிரெடிட் கார்ட் நம்பர்,
கடுதாசு அனுப்ப வீட்டு ந‌ம்ப‌ர்,

சூதாட‌ப் போனா அதுக்கும் ந‌ம்ப‌ர்,
விளையாட‌ப் போனா ஜெயிப்பதும் ந‌ம்ப‌ர்,
ட‌ய‌ப‌டீஸ், ர‌த்த‌ அழுத்த‌முன்னு அதுவும் ந‌ம்ப‌ர்,
டாஸ்மாக் போனாலும் தள்ளாடும் ந‌ம்ப‌ர்,

தப்புத் தண்டாக்கு இபிகோ நம்பர்,
ராசி பேர்வைக்க‌ நியூமராலஜி நம்பர்,
இதெல்லாம் கடந்தும் இழுத்துகிட்டிருந்தா,
டாக்ட‌ர் சொல்லுற‌ கெடுவும் ந‌ம்ப‌ர்,

இந்தப் பொழப்பு பொழைக்கறதுக்கு,
ங்கொய்யால போட்டு தள்ளிட்டு ,
ஜெயில்ல இருக்கிறவன் குடுத்து வ‌ச்ச‌வ‌ன்!
ஒரே ந‌ம்ப‌ர்! அதுவும் அர‌சாங்க‌ம் க‌வ‌ன‌ம் வெச்சுக்கும்!

No comments:

Post a Comment