Total Pageviews

Wednesday, August 17, 2011

உள்ளே அழுகிறேன்

அனுபவம் அதிகமென்பதால்
அவளை பிரிந்து விட்டேன்
நினைவுகளின் முன்
இன்னும் சிறு பிள்ளைதான்
அழுவதை தவிர
வேறு வழி இல்லை....!

கல்லூரி நாட்களில்

அவள் வரும்வரை
திரும்பி பார்க்கிறேன்
வந்து விட்டால்
திரும்பாமல் பார்க்கிறேன்
அவளைவிட உலகில்
எதுவும் பெரிதில்லை
அதை அவள் உணர்ந்துவிட்டால்
என்னுலகம் சிறிதில்லை.....!

கோபம் இல்லையடி என் தோழி

உன்னை அதிகமாக
நேசித்துவிட்டேன் போல
உன் அலட்சியதில்கூட
உன்மேல் எனக்கு
கோபம் இல்லை......!

உளறுகிறேன் கனவில்

எவ்வளவு
உறக்கத்தில் இருந்தாலும்-உன்
பெயரை மட்டும் சரியாய் உளறிவிடுகின்றேன்
கனவிலாவது நம் காதல்
கனிந்து விடக் கூடாதா என்று

பொழுது போக்கு

நீ வரும் வரை பொழுது போக
ஏதாவது கவிதை வாசித்துக்கொண்டிருப்பேன்,
நீ வந்த பின் உன் பெற்றோர்
எழுதிய கவிதையை நேசித்துக்கொண்டிருப்பேன்...

புகைப்படம்

அவளை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் அவளைப்பார்க்கும் வரத்தைத்தருவதால் என் கண்களுக்கு கடவுளாக தெரிவது அவள் புகைப்படமே,,,,,

காதல் தூது

என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?
உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?
அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?
இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?
அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!
ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை – உன்னைப் போல!!

எங்கிருந்து எங்கு

நான்
எழுதிய கடிதங்களை
உனக்கு
சேர்க்க முடியவில்லை!
அனுப்புனரும்,
பெறுநரும்,
ஒன்றான பிறகு
யாரிடமிருந்து
யாருக்கு அனுப்ப?
என்னிடமிருந்து எனக்கா?
உன்னிடமிருந்து உனக்கா?
நம்மிடமிருந்து நமக்கா?
என் இதயத்தின்
எல்லா தொகுதிகளிலும்
வெற்றி பெற்றுவிட்டாய்,
காதல் பதவியை
என்றைக்கு
ஏற்றுக்கொள்ள போகிறாய்?
குத்துவிளக்கில் ஏன்
தீபமேற்றுகிறாய்?
இதய விளக்கில்
காதல்
திரியாக திரிகிறது,
உனக்கு தெரிகிறதா?
உன் பயணங்களுக்கு
என்னிடம்
விமானமில்லை,
ஆனால் உன்
சிறகுகளுக்கான
வானம்
என்னிடம் இருக்கிறது!
உன் விரல்களுக்கு
என்னிடம்
மோதிரமில்லை,
ஆனால் உன்
விரலிடுக்குகளுக்கான
விரல்கள்
என்னிடம்தான் இருக்கின்றன!
காதலில் நனைந்த
கவிதைகள்
எத்தனை முறை
சிலிர்த்தாலும்,
நடுங்கிக்கொண்டுதான்
இருக்கிறது
அணைத்துக்கொள்ள அவளில்லாமல்!

விடை தெரியாத வினா

விடை தெரியாத பல வினாக்கள் உண்டு………….
முற்று பெறாத சில வரிகளும் உண்டு ………
அப்படியே இருந்து விட்டு போகிறேன் நானும், நீ இல்லாமல்…………!

Thursday, August 11, 2011

காதலிப்பது என்பது அவ்வளவு எளிதா? காதல் வசப்படும் ஆண்களுக்கு மட்டும்

ஆண்களே காதலை சொல்வதற்கு முன்பு....இந்த பதிவை சற்று படித்து வெகு நிதானமாக யோசித்து காதலை வெளிப்படுத்துங்கள்


அவள் சிரிப்பதற்காக நீ கோமாளியாக வேண்டும்……..
அவள் திட்டுவதற்காக நீ தவறிழைக்க வேண்டும்…….
அவள் ஆறுதல் சொல்லவதற்காக நீ சோகமாக வேண்டும்.........
அவள் சந்தோஷப்படுவதற்காக நீ சிரிக்க வேண்டும்........
அவள் தடவிக்கொடுப்பதற்காக நீ காயங்கள் ஏற்படுத்திக் கொள் வேண்டும்….
அவள் செல்லமாக கோபப்பட நீ அவளை வம்புக்கிளுக்கவேண்டும்.......
அவள் அணைப்பதற்காக நீ நொந்து போக வேண்டும்.......
அவள் தரும் முத்தங்களுக்காவே நீ வெற்றியடைய வேண்டும்......
அவள் சிந்தும் கண்ணீருக்காக நீ தோற்றுப்போக வேண்டும்....
அவள் துடைத்துவிடுவதற்காக நீ மழையில் நனைய வேண்டும்....
அவள் கனவில் வர நீ தூங்க வேண்டும்........
அவள் கொஞ்சுவதற்காக நீ குழந்தையாக வேண்டும்.....
அவள் அன்பு காட்டுவதற்காக நீ நோயாளியாக வேண்டும்.........
அவள் காட்டும் செல்லக்கோபங்களுக்காக நீ தாமதமாய் வரவேண்டும்.......
அவள் பேரை எப்போதும் சொல்ல நீ கிளி வளர்க்க வேண்டும்...........
அவள் சூடிக்கொள்ள நீ ரோஜா செடி வளர்க்க வேண்டும்.........
அவள் செல்ல சிணுங்கல்களுக்காக நீ கிண்டல் செய்வேண்டும் ......
அவள் அகன்ற விழிகளை ரசிக்க நீ அதிர்ச்சியளிக்க வேண்டும்....
அவள் பெருமிதப்பட நீ எப்போதும் உண்மையாய் இருக்க வேண்டும்......

இப்ப சொல்லுங்க காதலில் வசப்பட இந்த மாதிரி டெரரருக்கு எல்லாம் நீங்க ரெடியா மக்களே.